2027ஆம் ஆண்டுக்கான லிட்ரோ நிறுவனத்திற்கான திரவப் பெற்றோலிய எரிவாயுவை விநியோகிக்கும் ஒப்பந்தத்தை OQ Trading Limited நிறுவனத்துக்கு வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. சர்வதேச போட்டிப் புள்ளிகள் அடிப்படையில் குறைந்த விலையை முன்வைத்த இந்நிறுவனம், 2027 ஜனவரி முதல் 12 மாதங்களுக்கு 420,000 மெட்ரிக் டொன் வரை எரிவாயு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
