சவூதி விமான நிலையங்கள் மீதான ஹூதிகளின் தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்க அரசு ஊழியர்கள் விமான நிலையங்களைப் பயன்படுத்தத் தூதரக முன்அனுமதி பெற வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் ரியாத் சர்வதேச விமான நிலையச் செயல்பாடுகள் நீட்டிக்கப்பட்ட தடையால் முடங்கியுள்ள நிலையில், சவூதியிலுள்ள அமெரிக்கர்களை தீவிர அவதானத்துடன் செயல்பட அமெரிக்கத் தூதரகம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
