ரஷ்யா, ஈரான் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் பிரித்தானியாவின் பாதுகாப்புக்கு ஆபத்துகள் அதிகரித்து வருவதாக MI5 உளவு அமைப்பின் தலைவர் சேர் கென் மெக்கல்லம் எச்சரித்துள்ளார். AI அச்சுறுத்தல்களைக் கண்காணிக்க AITAC மையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மற்றும் பயங்கரவாதிகள் AI மூலம் உயிரி-ஆயுதங்களை உருவாக்கவும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தவும் முற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
