அமெரிக்கா தொடுத்துள்ள பொருளாதாரப் போரை எதிர்கொள்ள நீண்டகால தேசிய பொருளாதாரத் திட்டம் அவசியமென ஈரானிய நாடாளுமன்றச் சபாநாயகர் மொஹம்மத் பாகர் கலிபாஃப் வலியுறுத்தியுள்ளார். இராணுவ, இணையவழித் தாக்குதல்களை விடப் பொருளாதாரத் தடைகளின் தாக்கங்களைச் சமாளிப்பதே ஈரானுக்கு முன்னால் உள்ள பிரதான சவாலாகும் என்றும் மற்றும் இதற்கு அரசியல் ஒருமைப்பாடு தேவை என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
