இந்தியாவிற்குச் சென்றுள்ள இலங்கையர்களுக்கு மீண்டும் எமது நாட்டுக்குத் திரும்பி வருவதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
யுத்தத்தின் போது, நாட்டில் நிலவிய உறுதிப்பாடற்ற சூழ்நிலை காரணமாக, அங்கீகரிக்கப்பட்ட இறங்கு துறைமுகத்தின் ஊடாக மற்றும் முறையான கடவுச்சீட்டைப் பயன்படுத்தாமல் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து சென்று, பின்னர் இந்திய அரசாங்கத்தால் அகதிகளாகப் பதிவு செய்யப்பட்டவர்கள், ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஸ்தானிகராலயத்தின் மூலம் சுயமாக எமது நாட்டுக்குத் மீண்டும் திரும்புவதற்கு எதிர்பார்க்கின்றார்கள்.
அவர்கள் எமது நாட்டுக்கு மீண்டும் வருகை தருவதற்குத் தேவையான குடிவ…
[12:12, 17.8.2026] Selan Madakappu: செம்மணியில் அகழ்ந்து எடுக்கப்படும் மனித எச்சங்களுக்கு சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் பேரணி
யாழ்ப்பாணம் – 17.08.2026
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இடம்பெற்று வரும் அகழ்வுப் பணிகளின்போது கண்டெடுக்கப்பட்டு வரும் மனித எச்சங்கள் தொடர்பில் உண்மையை வெளிக்கொணரவும், தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்றதாகக் கூறப்படும் படுகொலைகளுக்கு சர்வதேச நீதியைப் பெற்றுத்தரவும் கோரி இன்று யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் வாசிகசாலை முன்றலில் இருந்து ஆரம்பமான பேரணி, கோயில் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் வரை இடம்பெற்றது. இதில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பேரணியில் கலந்துகொண்டவர்கள் செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் முழுமையானதும் சுயாதீனமானதுமான சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், அகழ்வுப் பணிகள் வெளிப்படைத்தன்மையுடனும் சர்வதேச தரநிலைகளுக்கு அமைவாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
மேலும், செம்மணி உள்ளிட்ட வடக்கு–கிழக்கில் கண்டறியப்பட்டுள்ள மனிதப் புதைகுழிகள் தொடர்பான உண்மைகள் முழுமையாக வெளிக்கொணரப்பட்டு, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நீதியும் பொறுப்புக்கூறலும் உறுதி செய்யப்பட வேண்டும் எனக் கோரப்பட்டது.
தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்றதாகக் கூறப்படும் இனப்படுகொலை மற்றும் பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசின் உள்நாட்டு விசாரணைகளில் மட்டும் நம்பிக்கை வைக்க முடியாது எனவும், சர்வதேச சமூகமும் ஐக்கிய நாடுகள் சபையும் இந்த விடயத்தில் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பேரணியில் வலியுறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பிலும், தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்றதாகக் கூறப்படும் இனப்படுகொலைகளுக்கு சர்வதேச நீதி கோரியும் தயாரிக்கப்பட்ட கோரிக்கை மனு, யாழ்ப்பாணத்தில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது.
செம்மணியில் வெளிவரும் ஒவ்வொரு மனித எச்சமும் கடந்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களின் உண்மையை வெளிக்கொணரும் முக்கிய ஆதாரமாக இருப்பதால், அவற்றை உரிய முறையில் பாதுகாத்து, அடையாளம் கண்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உண்மையும் நீதியும் கிடைக்கச் செய்வது சர்வதேச சமூகத்தின் பொறுப்பாகும் எனவும் பேரணியில் வலியுறுத்தப்பட்டது.
“உண்மை வெளிவர வேண்டும் – பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – செம்மணி உள்ளிட்ட மனிதப் புதைகுழிகளுக்கான விசாரணை சர்வதேச நீதிப் பொறிமுறையின் கீழ் முன்னெடுக்கப்பட வேண்டும்” என்ற கோரிக்கையுடன் பேரணி நிறைவடைந்தது.
