ஹூதி அமைப்பினரின் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து சவூதியிலுள்ள அமெரிக்கர்களுக்கு அமெரிக்கத் தூதரகம் அவசரப் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தநிலையில் விமான நிலையங்களைப் பயன்படுத்தும்போது விழிப்புடன் இருக்குமாறும் மற்றும் பாதுகாப்புச் சார்ந்த பகுதிகளைப் படம்பிடிப்பதையோ சமூக வலைதளங்களில் பகிர்வதையோ தவிர்க்குமாறும் தூதரகம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
