சுவிட்சர்லாந்தின் கிராபுண்டன் மாகாணத்தில் உள்ள சுஷ் மலைக்கிராமத்திற்கு அருகே சுற்றுலாப் பயணிகள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் 40 பேர் காயமடைந்தனர்.சுற்றுலா இடங்களை ஆராயுங்கள்
விபத்து நடந்த இடத்திற்கு அவசரகால மீட்புக் குழுக்கள் விரைந்து அனுப்பப்பட்டதாக உள்ளூர் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தப் பேருந்தில் நெதர்லாந்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்ததாக டச்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டச்சு சுற்றுலா நிறுவனமான OAD ஏற்பாடு செய்த பயணத்தில் அவர்கள் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேருந்தில் மொத்தம் 48 பேர் இருந்ததாக ‘De Telegraaf’ செய்தி வெளியிட்டுள்ளது.
சுஷ் மற்றும் அருகிலுள்ள ஜெர்னெஸ் கிராமத்திற்கு இடையேயான சாலையில், உள்ளூர் நேரப்படி மாலை 4.45 மணியளவில் பேருந்து தடுப்பு வேலியில் மோதியதாக சுவிஸ் ஒளிபரப்பு நிறுவனமான SRF தெரிவித்துள்ளது.
