செம்மணியில் போராட்டம் நடத்திய காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் – சர்வதேச நீதிக்கான கோரிக்கை வலியுறுத்தல்
யாழ்ப்பாணம், இன்று 22: செம்மணி மனிதப் புதைகுழியை ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் பார்வையிட்டதை ஒட்டி, வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் சிவில் அமைப்புகளைச் சேர்ந்தோர் இன்று செம்மணி பகுதியில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் புகைப்படங்கள் மற்றும் பதாகைகளை ஏந்திய போராட்டக்காரர்கள், சர்வதேச நீதியை உறுதிப்படுத்த வேண்டும், சுயாதீனமான சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான உண்மைகள் முழுமையாக வெளிக்கொணரப்பட்டு, பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே தங்களது பிரதான கோரிக்கை என போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.








