மட்டக்களப்பு – கிரான், கூளாக்காடு பிரம்படித்தீவு சித்தி விநாயகர் ஆலய வருடாந்த உற்சவத்தின் போது, 13 வயது சிறுவன் ஒருவர் வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெரிவிக்கப்படும் தகவல்களின் அடிப்படையில், நேற்று (11) இரவு சுமார் 11.00 மணியளவில் ஆலய உற்சவத்தின் போது பெரிய வெடி ஒன்று கொளுத்தப்பட்டுள்ளது. ஆனால், அது உடனடியாக வெடிக்காததால் அங்கிருந்து அப்புறப்படுத்தி வீசப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அவ்வாறு வெடிக்காமல் இருந்த வெடியைப் பார்ப்பதற்காக அருகில் சென்ற 13 வயது சிறுவன் எதிர்பாராத விதமாக அது வெடித்ததில் படுகாயமடைந்துள்ளார்.
உடனடியாக வாழைச்சேனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அந்தச் சிறுவன் உயிரிழந்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரான் முருங்கன்தீவைச் சேர்ந்த அந்தச் சிறுவனின் இழப்பு, அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், அனைவரது மனதிலும் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
