தென் கொரியக் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதை ஈரான் மறுத்துள்ளது.
இந்த வாரத் தொடக்கத்தில் ஹோர்முஸ் நீரிணையில் தென் கொரிய சரக்குக் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதைக் கண்டிப்பாக நிராகரிப்பதாகவும், திட்டவட்டமாக மறுப்பதாகவும் சியோலில் உள்ள ஈரான் தூதரகம் இன்று வியாழக்கிழமை தெரிவித்தது .
பனாமா கொடியை ஏந்திய எச்.எம்.எம். நாமு கப்பல், திங்களன்று 24 மாலுமிகளுடன் முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழிப்பாதையைக் கடந்து சென்றுகொண்டிருந்தபோது தாக்குதல் நடத்தப்பட்டு தீ ஏற்பட்டு சேதமடைந்தது.
ஈரான் அந்தக் கப்பலை நோக்கி சில முறை தாக்கியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பின்னர் கூறினார். மேலும், அந்த நீர்வழிப்பாதை வழியாக கப்பல் போக்குவரத்தை மீட்டெடுப்பதற்காக தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க தலைமையிலான முயற்சிகளில் இணையுமாறு தென் கொரியாவையும் அவர் வலியுறுத்தினார்.
