நாடக விழா
ஜேர்மனிய நாட்டின்
பிராங்போட் நகரில்
கலையும் தமிழும் சங்கமித்த
இனிய நாடகத்திருவிழா
நாட கத்தென்றலும்
துகளும்
சங்கமித்த ஓர் இனிய கலைவிழா
பல்வேறு நாடுகளிலிருந்து பத்து நாடகங்களைப் படைத்து, பல்வேறு சிரமங்களையும் கடந்து, நீண்ட பயணங்களை மேற்கொண்டு, நாடகக் கலையின் மீதான அளவற்ற காதலுடன் தங்களது திறமைகளை வெளிப்படுத்த இங்கு வருகை தந்த கலைஞர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.
இந்தியக் கலைஞர்களை அழைத்து வருவதுபோல், இவர்களுக்கான விமானப் பயணங்களோ, உல்லாச விடுதிகளோ ஏற்பாடு செய்யப்படவில்லை. இருப்பினும், இத்தகைய சவால்களையும் பொருட்படுத்தாது, கலையின் மீதான தணியாத காதலால், மகிழுந்துகளிலும் புகையிரதங்களிலும் நீண்ட பயணங்களை மேற்கொண்டு இவ்விழாவில் பங்கேற்க வருகை தந்தார்கள்.
குறிப்பாக, பாரிஸ் நகரிலிருந்து வருகை தந்த கலைஞர்கள் உண்மையிலேயே மனதாரப் பாராட்டப்பட வேண்டியவர்கள். நாடகக் கலையின் மீதான அவர்களது ஆழமான ஈடுபாடும், அளவற்ற ஆர்வமுமே அவர்களை இங்கு அழைத்து வந்து சேர்த்தன.
அத்தகைய கலை உள்ளங்களுக்குத் தலைவணங்கி, எமது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்
கொள்கின்றோம்.
அத்துடன் நெதர்லாந்திலிருந்தும் ஜெர்மனியின் பல்வேறு பகுதிகள், சுவிட்சர்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகளிலிருந்தும் வருகை தந்து இவ்விழாவிற்குச் சிறப்புச் சேர்த்த அனைவருக்கும் எமது இதயபூர்வமான நன்றிதனை தெரிவிக்கின்றோம்
தனக்கென வாழ்வோர் மத்தியில் தமிழுக்கென வாழும் மனிதர்
தானுண்டு, தன் வேலையுண்டு,
தனக்கான கடமைகளுண்டு என்று தத்தம் வாழ்க்கைப் பாதையில்
ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்களுக்கு மத்தியில்
தமிழுண்டு,
தமிழுக்கான பணியுண்டு,
தணியாத தமிழ்த்தாகம் உண்டு என்று தன்னை அர்ப்பணித்து வாழ்வோர்
இத்தரணியில்
எத்தனை பேர்….?
தேசங்கள் கடந்தாலும்,
தொலைவுகள் பல கடந்தாலும்,
எம் உயிரோடு கலந்த
நேசமிகு தமிழ்மொழியின் மீது நீங்காத பற்றும்,
ஆழமான பரிச்சயமும் கொண்டுதொடர்ந்து பயணிப்பவர்கள்
அரிதினும் அரிது.
இருபது ஆண்டுகாலத் தமிழ்ப்பணி
கலை மீதான ஆர்வத்தோடு
அவர் கடந்து வந்தபாதையில்
சவால்களும் இருந்தன
சிரமங்களும் இருந்தன
ஆனால்,அவர் சலிக்கவில்லை
தளரவில்லை
தனது இலட்சியத்திலிருந்து
ஒருபோதும் பின் வாங்கியதுமில்லை
நேற்று, இன்று, நாளை என
காலங்கள் மாறினாலும்,
இருபது ஆண்டுகளாக
தமிழைத் தன் நெஞ்சோடு
இறுகப் பற்றிக்கொண்டு,
எம் மொழியின் பெருமையையும் அதன் தனித்துவச் சிறப்பையும்
அடுத்தலைமுறைகளுக்குக்
கடத்திச் செல்லும்
உன்னதப் பணியில்
தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்
கொண்டிருப்பவர்
தமிழ்ப்பற்றைத் தன் வாழ்வின் அடையாளமாகக் கொண்டு,
தனியொரு மனிதராக நின்று,
தமிழையும் தமிழ்க் கலையையும்
தரணியில் உயர்த்திப் பிடிக்கப்பாடுபட்டு வரும் அந்த மனிதர்
திரு. தியான் அவர்களே
கலைஞர்களை ஒன்றிணைக்கும் அரும்பணி
கலைஞர்களை ஒன்றிணைத்து,
நாடகக் கலையை வளர்த்து,
எம்மவர்களின்திறமைகளை
உலகறிய வெளிக்கொணர
அவர்களுக்கான மேடையை அமைத்து,
அவர்களின் கலைத்திறனை அங்கீகரித்து,
அவர்களைக் கௌரவிக்கும்
இந்த அரிய பணியானது
எளிதில் செய்துவிடக்கூடிய ஒன்றல்ல.
மேலும் நாடகக்கலையின்
தங்களை அர்ப்பணித்த
வாழ்ந்த ஐவரையும்
அவர்களை மாண்பேற்றல்
செய்ததையும் விழாவின்
சிறப்பம்சமாகும்.
வந்தவரை இன்முகம் கொண்டு வரவேற்று
அறுசுவை உணவுகளை
ஏற்பாடு செய்த அன்புக்குரியவர்களும்
எம் நன்றி.
அர்ப்பணிப்பும்,
அயராத உழைப்பும்,
ஆழமான தமிழ்ப்பற்றும்,
கலையின் மீதான தீராத காதலும்
இணைந்தால்தான்
இத்தகைய பணியைச் சாதிக்க முடியும்.
அந்த வகையில்,
திரு. தியான் அவர்களின்
அயராத முயற்சிகளையும்
அரும்பெரும் சேவையையும்
மனதாரப் பாராட்டி,
எமது உளமார்ந்த வாழ்த்துகளையும்
நன்றியினையும் தெரிவித்துக்
கொள்கின்றோம்.
அவரது பணிகளுக்கு நன்றி கூறுவதென்றால்,
இன்னும் பல பல பக்கங்கள் தேவைப்படும்.
வார்த்தைகளால் மட்டும்
அவரது அர்ப்பணிப்பை அளந்துவிட முடியாது.
அதேவேளை,
இவ்விழா சிறப்புற நடைபெறுவதற்காக,
பல்வேறு வழிகளில் துணைநின்று,
பக்கபலமாக இருந்து,
அயராது உழைத்த
அத்தனை நல்லுள்ளங்களுக்கும்
எமது இதயபூர்வமான நன்றியினை தெரிவித்துக்
கொள்கின்றோம்.
உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும்
இந்த விழாவின் வெற்றியில்
முக்கியமானதொரு அங்கமாகும்.
பார்வையாளர்களுக்கு எமது இதயபூர்வமான நன்றி
எமது நிகழ்வைக் காணவும்,
தமிழ்க் கலையின் சிறப்பை உணரவும்,
தமிழ்மொழியின் மீது கொண்ட அன்பினால் இவ்விழாவில் பங்கேற்கவும் வருகை தந்த அன்புள்ளங்கள் அனைவருக்கும்
எமது மனமார்ந்த நன்றி.
கலைஞர்களை ஊக்குவித்து,
தமிழ்க் கலையை ஆதரித்து,
தமிழின் பெருமையை அடுத்த தலைமுறைக்குக்கொண்டு செல்லும் உங்கள் ஆதரவு என்றும் எமக்குப் பெரும் ஊக்கமாகும்.
தமிழ் வாழ்க
தமிழ்க்கலை வளர்க
தமிழர் ஒற்றுமை ஓங்குக
தமிழ் சிறக்கட்டும்
தமிழின் புகழ் உலகெங்கும் பரவட்டும்
