Sri Lanka People's Front party presidential election candidate and former wartime defence chief Gotabaya Rajapaksa looks on during the final election campaign rally in Homagama, Sri Lanka November 13, 2019. REUTERS/Dinuka Liyanawatte
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று வெள்ளிக்கிழமை (11) நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருகை தந்துள்ளார்.
மிக் போர் ரக விமானக் கொள்முதல் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காகவே அவர் அங்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, முன்னாள் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்க, மிக் போர் ரக விமானக் கொள்முதல் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக நேற்று (10) வியாழக்கிழமை நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு சென்று, ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
