இனப்படுகொலையானது 1958,மே,22, இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட நாடு தழுவிய இனப்படுகொலை இதுவாகும்.
இந்த வன்முறையானது . 1958,மே,22, ல் தொடங்கி 1958, யூன்,08, ம் திகதி வரை நீடித்தது சிங்கள குண்டர்களை அப்போது ஆட்சியில் இருந்த ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதமரான எஷ்.டவிலியூ ஆர்.டி. பண்டாரநாயக்கா அரசினால் ஏவிவிடப்பட்டு நூற்றுக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர், பெண்களின் மீதான பாலியல் வன்முறைகள் நிகழ்த்தப்பட்டன,
தமிழர்களின் சொத்துக்கள் மற்றும் வணிக நிலையங்கள் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன.
இலங்கையில் கொண்டுவரப்பட்ட ‘சிங்களம் மட்டும்’ சட்டத்திற்கு எதிராக தமிழர்கள் நடத்திய போராட்டங்களை அடுத்து, இனவாதக் குழுக்களால் இந்த வன்முறை திட்டமிட்டுத் தூண்டப்பட்டது.
வவுனியாவில் நடைபெற்ற 6,வது இலங்கை தமிழரசுக்கட்சி மகாநாட்டுக்கு 1958,மே,22, ம் திகதி ,மட்டக்களப்பு மற்றும் அம்பாறையிலிருந்து ரயிலில் சென்ற தமிழர்கள், பொலன்னறுவை பகுதியில் சிங்களக் காடையர்களால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு சிலர் கொல்லப்பட்டனர்.
1958,மே,22 – இனக்கலவரம் ஆரம்பம் சிங்களவரால் தமிழர்கள் கொலைசெய்யப்பட்டனர்.
1958,மே,23 – மட்டக்களப்பில் தொடருந்து ஒன்று தடம் புரண்டது.
1958,மே,24 – இலங்கையில் பொலன்னறுவைதொடருந்து நிலையத்தில் தொடருந்தில் வந்த தமிழ்ப் பயணிகள் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். பல இடங்களிலும் இனக்கலவரம் பரவியது.
1958,மே,25 – பொலன்னறுவைவையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
1958,மே, 27 – இலங்கை முழுவதற்கும் அவசரகாலச் சட்டம் அறிவிக்கப்பட்டு, ஊடகத் தணிக்கை அமுல்படுத்தப்பட்டது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிரப்பிக்கப்பட்டது.
1958,மே,27 – இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜாதிக விமுக்தி பெரமுன ஆகிய கட்சிகள் தடை செய்யப்பட்டன.
1958,மே,27 – இலங்கையின் தெற்கே பாணந்துறையில்சிங்களக் காடையர்களால் இந்துக் கோவில் ஒன்று எரிக்கப்பட்டு, கோவில் பூசகர் சுந்தரராஜக் குருக்கள் சித்திரவதை செய்யப்பட்டு உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார்.இவரது 25 வயது இளம் மனைவியும் அவரது 4 வயதுக் குழந்தையும் பின்னர் அகதிகளாக யாழ்ப்பாணம் சென்றனர்
1958,மே,28 – கல்கிசையில் தமிழருக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் அதிகமானோர் இராணுவத்தினரால் கலைக்கப்பட்டனர்.
1958,மே,28 – கல்கிசை, ஓட்டல் வீதியில் தமிழர் ஒருவர் உயிருடன் எரிக்கப்பட்டார்.
1958,மே,29 – யாழ்ப்பாணத்தில் எந்த ஒரு சிங்களவரும் கொல்லப்படவில்லை என அங்கு பயணம் மேற்கொண்ட பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் குணசேன டி சொய்சா பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவிற்கு அறிவித்தார். யாழ்ப்பாணம் நாக விகாரை தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.
1958,மே,30 – இலங்கையின் தெற்கே கலவரங்களால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் அகதிகளாக கொழும்பு றோயல் கல்லூரி, புனித பீட்டர் கல்லூரி ஆகியவற்றில் தங்க வைக்கப்பட்டனர்.
1958,யூன்,01 – கலவரங்களில் பாதிக்கப்பட்ட 4,397 தமிழ் அகதிகள் கப்பல் மூலம் காங்கேசன்துறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கிருந்து 2,100 சிங்களவர்கள் கொழும்பு கொண்டு வரப்பட்டனர்.
1958,யூன்,05 – இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 10 உறுப்பினர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
1958,சயூன் 6 – மேலும் 5,029 தமிழர் கப்பல் மூலம் யாழ்ப்பாணம் அனுப்பப்பட்டனர்.
1958,யூன் 8 – ஜாதிக விமுக்தி பெரமுன கட்சித் தலைவர் கே. எம். பி. ராஜரத்தினா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து, கொழும்பு, பதுளை மற்றும் மலையகப் பகுதிகளிலும் தமிழர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பாணந்துறை போன்ற இடங்களில் தமிழ் மக்களின் வழிபாட்டுத் தலங்கள் எரிக்கப்பட்டன.
வன்முறை தீவிரமடைந்து பல நாட்கள் ஆகும் வரை அரசாங்கம் அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. 1958,மே, 27, ல். நாட்டில் அவசர காலச்சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது.
இலங்கையின் 1958, இனப்படுகொலைக்கு முன்னம் முதலாவது தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையானது கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டம் கல்லோயாவில் 1956, யூன்.11, ல் நடந்தது. இந்த இனப்படுகொலைதான் இலங்கை பிரித்தானியரிடம் இருந்து 1948, பெப்ரவரி,04, ல் விடுதலை பெற்றபின்னர் இலங்கையில் இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற முதலாவது பெரும் இனவெறித்தாக்குதலும் இனப்படுகொலை ஆரம்பமும் ஆகும். இது 1956,யூன்,11, ல் ஆரம்பித்து 1956, யூன்,16, வரை தொடர்ந்து ஐந்து நாட்கள் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
1956, ல் தொடங்கிய இனப்படுகொலை 2026, வரை 70, ஆண்டுகளாக தொடர்கிறது.!
வரலாறுகளை மறந்து வாழ்பவன் மரக்கட்டைகளுக்கு சமன்..!
-பா.அரியநேத்திரன்-
