சர்ச்சைக்குரிய எயார்பஸ் விமானக் கொள்வனவு விவகாரத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக நீதிமன்றம் முக்கிய உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.
100 மில்லியன் ரூபாய் கையூட்டல் பெற்றதாகவும் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் நாமல் ராஜபக்ச தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட நால்வருக்கு எதிராக 24 குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், வழக்கில் 59 சாட்சிகள் பட்டியலிடப்பட்டுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்றைய தினம் புதன்கிழமை கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் நாமல் ராஜபக்ச ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது, அவரது விளக்கமறியலை எதிர்வரும் நவம்பர் மாதம் 19ஆம் திகதி வரை நீடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
