நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கிய 97 வயது குணா மாயா போரா என்ற மூதாட்டி, சுமார் 8–9 மணி நேரத்திற்குப் பின்னர் இராணுவத்தினரால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
இடிபாடுகளுக்குள் அவரது தலையின் சிறிய அசைவைக் கவனித்த வீரர்கள், அவரை கண்டுபிடித்து பொக்லைன் இயந்திரத்தின் மூலம் பாதுகாப்பாக வெளியேற்றி, பின்னர் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
பரிசோதனையில் பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், தற்போது அவர் நலமாக இருப்பதாக அவரது பேரன் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில், 97 வயது மூதாட்டி உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
