யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருந்து களஞ்சிய சாலையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் கொழும்பில் இருந்து வருகை தந்திருந்த அரச பகுப்பாய்வு திணைக்கள விசேட குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சிய சாலையில் கடந்த சனிக்கிழமை அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 05 மணி நேர தீவிர போராட்டத்தின் பின்னர் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும் , களஞ்சியசாலையில் இருந்த பெறுமதியான மருந்துகளில் சுமார் 60 வீதமானவை தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
Tourist Destinations
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண தடயவியல் பொலிஸார் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்து , குறித்த பகுதியை குற்ற பிரதேசமாக அறிவித்து, தடயவியல் பரிசோதனைகளை முன்னெடுத்து வரும் நிலையில், கொழும்பில் இருந்து வருகை தந்துள்ள அரச பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகளும் சம்பவ இடங்களில் பகுப்பாய்வு சோதனைகளை முன்னெடுத்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
