ட்ரென் டி ஆகுவா எனும் பெயர்போன கும்பலின் தலைவரான ஹெக்டர் ரஸ்டன்ஃபோர்ட் குரேரோ ஃப்ளோரஸ், வெனிசுலாவில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தல்
பல அமெரிக்க நகரங்களில் நடக்கும் பெரும்பாலான வன்முறை மற்றும் போதைப்பொருள் விற்பனைக்கு ட்ரென் டி அராகுவாதான் காரணம் என்று டிரம்ப் நிர்வாகம் மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டி வருகிறது .
தென்கிழக்கு மாநிலமான பொலிவரில் அமெரிக்காவுடன் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது குரேரோ ஃப்ளோரஸ் கொல்லப்பட்டதை வெனிசுலா உறுதி செய்துள்ளது.
ட்ரென் டி அரகுவா பயங்கரவாதிகளுக்கு வெனிசுலாவிலோ அல்லது வேறு எங்குமே இனி பாதுகாப்பான புகலிடம் இல்லை. எனது தலைமையின் கீழ், இந்தக் கொடூரமான கொலைகாரர்களையும் போதைப்பொருள் கடத்தல்காரர்களையும் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் கண்டுபிடித்து, அவர்களுக்கு உரிய நரகத்தின் ஆழத்திற்கு அனுப்புவோம்.வெனிசுலாவில் உள்ள அந்தக் கும்பலின் வளாகங்களில் ஒன்றின் மீது இந்த வாரத் தொடக்கத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
