மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனின் (சபேசன்) புகழுடலுக்கு யாழ். ஊடக அமையத்திலும், பின்னர் யாழ். தினக்குரல் பத்திரிகை அலுவலகத்திலும் இன்று இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ். ஊடக அமையத்தின் தலைவராகவும் யாழ். தினக்குரல் பத்திரிகையின் ஆசிரியராகவும் பதவிவகித்த மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரன், உடல்நலக்குறைவு காரணமாக, 46 வயதில், கடந்த மாதம் 29 ஆம் திகதி கனடாவில் காலமானார்.
அன்னாரின் புகழுடல் இன்று செவ்வாய்க்கிழமை தாயகம் கொண்டுசெல்லப்பட்ட நிலையில், இன்று இரவு இரண்டு ஊடக மையங்களிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஊடகவியலாளர்கள், ஊடக பணியாளர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டு சசபேசனின் புகழுடலுக்கு அஞ்சலியை செலுத்தினர்.
இதேவேளை, சபேசனின் புகழுடல் தாயகம் கொண்டு செல்லப்படுவதற்கு முன்பாக கடந்த வியாழக்கிழமை (Aug 06) Toronto வில் இறுதிவணக்க நிகழ்வும், பிரியாவிடை நிகழ்வும் Chapel Ridge Funeral Home இல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
