இலங்கையில் கடந்த 50வருடங்களிற்கு மேலாக மரணதண்டனை நிறைவேற்றப்படாத நிலையில் மீண்டும் அதனை அமுல்படுத்த அனுர அரசு தயாராகிவருவதாக கூறப்படுகின்றது.
வெலிக்கடை சிறையின் தூக்குமேடை பயன்பாட்டிற்குத் தயாராகவுள்ளதாகவும் அங்கு இரண்டு மரணதண்டனை நிறைவேற்றும் அலுகோசுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான தீர்மானத்தை அரசாங்கம் எடுத்துள்ள நிலையில், புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அலுகோசுகள் இருவரும் – வெலிக்கடை சிறைச்சாலையுடன் இணைக்கப்பட்டு சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு, கடமைக்காகத் தயார் நிலையில் உள்ளனர்.
இலங்கையில் வெலிக்கடை சிறைதான் தற்போது கட்டமைப்பு ரீதியாக இயங்கும் ஒரே தூக்குமேடையைக் கொண்டுள்ளது. இலங்கையில் தற்போது 806 மரணதண்டனைக் கைதிகள் உள்ளனர். போதைப்பொருள் குற்றத்துக்காக தண்டனை பெற்றோர் 58 பேர். அவர்களில் 52 ஆண்கள், 06 பேர் பெண்களாவர்;.
இலங்கையில் கடைசியாக 1976-ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் திகதி வெலிக்கடை சிறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. எம்பிலிபிட்டியவைச் சேர்ந்த சந்திரதாச என்பவரே கடைசியாத் தூக்கிலிடப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
