அமெரிக்கா–ஈரான் இடையிலான தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
இன்று புதன்கிழமை (9) பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 99.45 அமெரிக்க டாலராக வர்த்தகமானது. இது முந்தைய நாளின் விலையை விட 2 அமெரிக்க டாலருக்கும் அதிகமான உயர்வாகும்.
அதேவேளை, அமெரிக்காவின் முக்கிய எண்ணெய் விலைக் குறியீடான வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெயின் விலையும் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் 93.10 அமெரிக்க டாலராக இருந்த ஒரு பீப்பாய் WTI எண்ணெய், இன்று 94.51 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் மேலும் தீவிரமடையும் பட்சத்தில், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்த அச்சம் காரணமாக எண்ணெய் விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
