இன்றைய நாள், ரீச்சா ஒருங்கிணைந்த பண்ணையில் நடைபெற்ற யோகாசனப் பயிற்சி, உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி அளித்த அர்த்தமுள்ள ஆரோக்கிய நிகழ்வாக அமைந்தது. அன்புக்கும் மதிப்புக்கும் உரிய திரு. பாஸ்கரன் கந்தையா அவர்களின் சிறந்த ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சுமார் 75-க்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு யோகாவின் மகத்துவத்தை அனுபவித்தனர்.
பயிற்சியின் தொடக்கத்தில் பலருக்கு யோகாசனங்கள் சற்று கடினமாகத் தோன்றின. ஆனால் ஒவ்வொரு ஆசனத்தையும் தொடர்ந்து செய்து வந்தபோது, உடல் முழுவதும் நெகிழ்வுத் தன்மை அதிகரித்ததையும், மனதில் புத்துணர்ச்சி, அமைதி மற்றும் புதிய உற்சாகம் உருவானதையும் அவர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். அன்றாட வேலைப்பளுவால் மன அழுத்தத்தில் வாழும் மனிதர்களுக்கு யோகா எவ்வளவு அவசியமானது என்பதை அவர்கள் நேரடியாக உணர்ந்தனர்.
இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், பணிச்சுமை, மன அழுத்தம் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. இவற்றிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமான வாழ்க்கையை உருவாக்குவதற்கு யோகா ஒரு சிறந்த வழிகாட்டியாகும். உடலுக்கு வலிமை, மனதிற்கு அமைதி, சிந்தனைக்கு தெளிவு மற்றும் வாழ்விற்கு புதிய நம்பிக்கையை அளிக்கும் அரிய கலைதான் யோகா.
நீண்ட காலத்திற்குப் பிறகு, இவ்வளவு ஆர்வத்துடனும் விருப்பத்துடனும் யோகாவைக் கற்றுக்கொள்ள முன்வந்த ஒரு அணியினரை கண்டது எனக்கும் பேரானந்தத்தை அளித்தது. இந்த உற்சாகம் தொடர வேண்டும் என்ற நோக்கில், ரீச்சா ஒருங்கிணைந்த பண்ணையில் தொடர்ந்து யோகா பயிற்சிகளை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது மிகவும் பாராட்டத்தக்க விடயமாகும்.
எனவே, உடல் ஆரோக்கியத்தையும் மன மகிழ்ச்சியையும் விரும்பும் அனைவரும் இந்த யோகா பயிற்சிகளில் இணைந்து பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறேன். நம் வாழ்க்கையின் மிகப் பெரிய செல்வம் ஆரோக்கியம் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதோம்.
தொடர்ச்சியாக யோகா செய்வோம்…ஆரோக்கியமாக வாழ்வோம்…மன அமைதியுடன் முன்னேறுவோம்…வாழ்வில் வெற்றி பெறுவோம்!
யோகா பயிற்றுவிப்பாளர்கலைஞர் குமாரு யோகேஸ்வரன்வா வாழ்க வளமுடன்!
