கடந்த 10.10.2026 சனிக்கிழமை லண்டனில் திரு.பராபரன் அவர்களின் இசைச்சுவடுகள் 2, 3 பாகங்கங்கள் இசைத்தொகுப்பு வெளியீட்டு விழா மிகவும் சிறப்பாக நடந்தேறியது. அரங்கம் நிறைந்த காட்சி.! இந்த அளவுக்கு மக்கள் வருவார்கள் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. வந்தவர்கள் எல்லோருமே மிகவும் மகிழ்வாக சென்றார்கள். இவ்வளவு ஆதரவும் என்னை மிகவும் வளப்படுத்தும், பக்குவப்படுத்தும் என்றே நினைக்கிறேன். கட்டிடம் உயர உயர அத்திவாரம் சரியாக இருக்கவேண்டும். இந்த பெயரையும்,புகழையும், ஆதரவையும் காப்பாற்றிக்கொள்ள தன்னடக்கம் அவசியம். அடுத்த இசைத்தொகுப்பில் மேலும் சிலரை இணைத்து செய்யவுள்ளேன். உங்கள் ஆதரவு கிடைக்கும் என்பதில் எனக்கு பூரண நம்பிக்கை உண்டு.பராபரன்
நன்றி, வணக்கம்.
