இந்தோனேசியாவின் ஜாவா கடலில் 240-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற கப்பல் மோசமான வானிலையில் சிக்கி விபத்துக்குள்ளானதில், 6 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 107 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 130 பயணிகளை காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக் குழுவினர் பல பயணிகளை ஏற்கனவே பாதுகாப்பாக மீட்டுள்ளதாக பன்ஜார்மாசின் தேடல் மற்றும் மீட்பு அலுவலகத்தின் தலைவர் ஐ புட்டு சுதயானா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Insurance
இந்தக் கப்பல் சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 10.13 மணியளவில் (0330 UTC) புறப்பட்டது. மோசமான வானிலை காரணமாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கப்பலுடன் அதன் இயக்குநர் தொடர்பை இழந்ததாக அதிகாரிகள் கூறினர்.
கப்பல் ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2 மணியளவில் (0700 UTC) பன்ஜார்மாசினை சென்றடைய திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், அதற்கு முன்னதாகவே கப்பல் தொடர்பை இழந்ததால், அதில் பயணித்தவர்களின் நிலை குறித்து மீட்புப் படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
