கிளிநொச்சி தமிழாசிரியர் இரா. நிஷாந்தன் எழுதிய 50 இலக்கியக் கட்டுரைகளைக் கொண்ட நயம்பேசு என்ற நூலின் வெளியீட்டு விழா அண்மையில் 09.05.2026 கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில்; தென்கருணையூர் அமிர்த ஸ்ரீகாந்தக் குருக்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனும் சிறப்பு விருந்தினர்களாக கோப்பாய் ஆசிரியர் கலாசாலை முதல்வர் செந்தமிழ்ச்சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசன், கிளிநொச்சி மாவட்டச்செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் அமரசிங்கம் கேதீஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் வெளியீட்டுரையை கவிஞர் சர்வேஸ்வரன் வில்வரசன் ஆற்றினார். நயப்புரையை கோப்பாய் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர் கவிஞர் வேல். நந்தகுமார் வழங்கினார். நிகழ்வுகளை தொலைக்காட்சி ஊடகவியலாளர் சௌமியா தொகுத்து வழங்கினார்.
நிகழ்வில் பலநூற்றுக்கணக்கான மாணவர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
நயம்பேசு என்ற இலக்கிய நூலில் சிலப்பதிகாரம், கம்பராமாயணம், பாரதியார் பாடல்கள் உள்ளிட்ட – பாடசாலை மாணவர்களுக்கான இலக்கியப் பகுதிகளில் இருந்து ஐம்பது கட்டுரைகள் உள்ளன. இதன் விலை 1200 ரூபா ஆகும்.
Weniger anzeigen
