இந்தியாவைச் சேர்ந்த ராவ் என்பவர், ஐக்கிய அரபு அமீரக லாட்டரியில் இரண்டாம் பரிசை வென்று இந்திய மதிப்பில் 12.95 கோடி ரூபாயைப் பெற்றுள்ளார்.கடந்த ஒக்டோபர் 3ஆம் திகதி, ஐக்கிய அரபு அமீரக லாட்டரியின் இணையதளத்தில் ‘ஈஸி பிக்’ முறையைப் பயன்படுத்தி அவர் லாட்டரிச் சீட்டொன்றை வாங்கியுள்ளார்.அந்த லாட்டரிச் சீட்டுக்கு இரண்டாம் பரிசு கிடைத்துள்ள நிலையில், முதல் பரிசுக்கான எண்களில் ஒன்றுடன் மட்டுமே அவரது எண்கள் வேறுபட்டிருந்தன.
