செங்கடலில் கப்பல்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட தூதர் காஜா கல்லாஸ் அழைப்பு விடுத்தார் .
International Relations
செங்கடலில் எண்ணெய் கப்பல் மீதான தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதது. சட்டவிரோதமானது மற்றும் இப்பகுதியில் ஏற்கனவே நிலவும் பதற்றமான சூழ்நிலையை மேலும் மோசமாக்குகிறது என்று கல்லாஸ் கூறினார்.
சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கும் மாலுமிகளின் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் ஹூதிகள் நிறுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
செங்கடலுக்கான அந்த அமைப்பின் கடற்படைப் பணி, அனைவருக்குமான கப்பல் போக்குவரத்து சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது என தெரிவித்தார்.
செங்கடலில் இரண்டு சவுதி எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் ஆதரவு தீவிரவாதக் குழு கூறியதைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு, செங்கடலில் உள்ள சவூதி துறைமுகங்களை முற்றுகையிடுவதாக ஹூதிகள் அறிவித்திருந்தனர்.
