12.07.27 அன்று நடைபெற்ற வடமத்திய மாகாண மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டியில், அதிகூடிய புள்ளிகளைப் பெற்று டோட்முண்ட் தமிழாலயம் முதலிடத்தைப் பெற்று மகத்தான சாதனையைப் படைத்தது.
இந்தப் போட்டியில் நாமும் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் பங்கேற்று பல்வேறு வெற்றிகளைப் பெற்றமை எமக்கு அளவற்ற மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது.
வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவியருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்! அவர்களின் விடாமுயற்சி, ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பிற்கு எமது பாராட்டுகள்.
இவ்வெற்றிக்குப் பின்னால் அயராது உழைத்த ஆசிரியர்கள், பயிற்றுவிப்பாளர்கள், பெற்றோர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்கள் அனைவருக்கும் எமது இதயங்கனிந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இன்னும் பல வெற்றிகளை நோக்கி டோட்முண்ட் தமிழாலயம் தொடர்ந்து முன்னேற வாழ்த்துகள்!
