திருச்செங்கோடு அருகே மொபட் மீது தனியார் கல்லூரி பஸ் மோதிய விபத்தில் சகோதரிகளான 4 மாணவிகள் உயிரிழந்துள்ளனர்.
19 வயது சுபிதா கலைச்செல்வி, 16 வயது நிவேதிதா, 13 வயது தனுஸ்ரீ மற்றும் 12 வயது அபிநயா ஆகியோர் இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
பாடசாலை முடிந்து வீட்டிற்கு திரும்பி செல்லும் வழியில், மோட்டர் சைக்கிள் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிதியுதவி அறிவித்துள்ளார்.
சாலை விபத்தில் உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டார்.
