புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தில் பிறந்து யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த பழனிவேல் சுந்தரலிங்கம் இன்று 27.10.2026 காலமானார். அன்னார் எமது 10 ஆம் வட்டாரத்தில் பிறந்து புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றுஅங்கிருந்து முதன்முதலாக பேராதனை பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று பின் அரசசேவையில் இணைந்தார். இவர் வேலணை பிரதேசசெயலகம், யாழ்மாவட்டசெயலகம், திருகோணமலை மாவட்ட செயலகம், என பல்வேறு இடங்களில் கடமையாற்றியவர். இனிமையாக பேசுபவர், சிறந்த ஆளுமையுள்ளவர். எளிமையான வாழ்க்கை என்பன அவரின் அணிகலன்கள். ஓய்வு பெற்ற பின் யாழ்ப்பாணத்தில் இருந்தாலும் தனது மண்ணை நேசித்தவர். புங்குடுதீவு தன் பிரதேசத்தில் இறுதிக்காலங்களில் எந்த நிகழ்வு என்றாலும் தரிசிப்பவர். எல்லோர் இதயங்களிலும் வீற்றிருக்குமம் அவர் இளையதலைமுறையினை தட்டிக் கொடுத்து ஊக்குவிக்கும் ஒரு முதுபெரும் ஆலமரம் அடியோடு சரிந்து விட்டது. எமது கிராமம் சிறந்த கல்விமான்களையும் அறிவாளிகளையும் இழந்த தவிர்க்கிறது. அன்னாரின் ஆத்மா நாயன்மாரின் (நாகதம்பிரான்) திருவடிகளில் இளைப்பாறட்டும்
தம்பி
மருத்துவர் கணேஸ் ஸ்ரீதரன்புங்குடுதீவு
