அஞ்சாமை யொன்றை யரணாகக் கொண்டவர்
வெஞ்சமரில் வீரம் விளைத்தவர் – துஞ்சிவிடப்
பஞ்சினில் தீயும் பரவியெங்கும் பற்றியதாய்
நெஞ்சத்தில் மூண்ட நெருப்பு .
உரிமைக் குரல்களங்(கு) ஓங்கியொலிக் காமல்
நெரித்தார் குரல்வளை நீசர் – எரியிலிட்டார்
வஞ்சகரின் வன்முறையை வாழ்வில் மறப்போமா ?
நெஞ்சத்தில் மூண்ட நெருப்பு .
இரா . சம்பந்தன்
22 – 7 – 2026
