இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள அராலி கிராமத்தின் வண்ணப்புரம் பகுதியில் ‘விசாலாட்சி அம்பாள் சமேத விசுவநாதேசுவரர் தேவத்தானம்’ (காசி விஸ்வநாதர் கோயில்) அமைந்துள்ளது. காசிக்கு நிகரான ஆன்மீகச் சிறப்புடையதாகக் கருதப்படும் இந்த ஆலயம் அப்பகுதியில் பிரசித்தி பெற்ற வழிபாட்டுத் தலமாகத் திகழ்கிறது.
இன்று 21.06.2026 ஞாயிற்றுக்கிழமை இத்திருத்தலத்தில் தேர்த்திருவிழா சிறப்பாக இடம் பெற்றது.
மிகப்பழமை வாய்த கோவில் இது.யாழ்பாணம் வண்ணை சிவன் கோவிலும், இக்கோவிலும் சமகாலத்தில் உருவானதாக சரித்திரம் கூறுகின்றது.
