துயர் பகிர்வோம்
ஒலிபரப்பாளர் ஜஸ்ரின் தம்பிராஜா காலமானார்
யாழ்ப்பாணம் சுண்டிக்குளியைச் சேர்ந்த, பிரான்ஸில் வாழ்ந்து வந்த ஒலிபரப்பாளர் ஜஸ்ரின் தம்பிராஜா இவ்வுலகிலிருந்து விடை பெற்றுவிட்டார்.
பரிஸில் ஏ.பி.சி வானொலி வழியாக தனது ரசிகர்களைத் தேடிக்கொண்ட ஜஸ்ரின், காத்திரமான பல நிகழ்ச்சிகளை வழங்கி வந்தார்.
நோய்வாய்ப்பட்டுள்ளார் என அறிந்த வேளையில், அவருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. வைத்தியமனையில், ஆபத்தான நிலையில் உள்ளார் என்ற பொழுதுதான் நேரில் பார்க்க முடிந்தது.
அன்றைய அந்தக் கணங்கள், அவர் மீண்டு வருவாரா என்ற கேள்வியை எழுப்பியது!
அந்தக் கேள்விக்கான பதில், 17.08.2026 மாலை வெளியானது.
அமைதியாக ஜஸ்ரின் தம்பிராஜா, தனது இறுதிப்பயணத்தை மேற்கொண்டுவிட்டார்.
ஜஸ்ரின் தம்பிராஜா அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு, எமது ஆழ்ந்த இரங்கல்.
