CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 75
காலி – உரகஸ்மான்ஹண்டி பகுதியில் வீதியில் அறுந்து விழுந்த மின்கம்பியில் சிக்கி மூதாட்டி உயிரிழந்துள்ளார்.
மீகாஸ்பிட்டியாவைச் சேர்ந்த 74வயதான மூதாட்டி, தனது வீட்டில் இருந்து, அருகிலுள்ள வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, பலத்த காற்றினால் மரம் ஒன்று வீதியில் விழுந்ததையடுத்து, மின்கம்பியும் அறுந்து கீழே விழுந்துள்ளது. அதில் சிக்கி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் உரகஸ்மான்ஹண்டி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
