சவுதியில் மரணதண்டனை விதிக்கப்பட்டதாகக் கூறப்படும் அனோஜனின் விடுதலைக்கு பலதரப்புக்களும் குரல் கொடுக்க தொடங்கியுள்ளன.
அவர் செய்தது தவறுதான்; அதற்காக அவரும் ஏலவே மன்னிப்பு கேட்டிருந்தார். நாங்களும் மன்னிப்பு கேட்கின்றோம். ஜம்மியத்துல் உலமா சபை, இலங்கை அரசாங்கம், சவுதி அரசாங்கம், முஸ்லிம், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தயவுசெய்து மீண்டும் ஒருமுறை மன்னித்து, எனது மகனை உயிரோடு மீட்டுத்தாருங்களென அனோஜனின் கோரிக்கை விடுத்துள்ளது.
அனோஜனின் விடுதலை ஓர் உயிருக்கான போராட்டம் தேவையற்ற முகநூல் பதிவுகள், கூட்டங்கள், போராட்டங்களைத் தவிர்த்து மனிதாபிமானத்திற்கு வழிவிடுங்கள். தமிழ், முஸ்லிம் மக்கள் அமைப்புக்கள் இணைந்து இந்த விடயத்திலே கோரிக்கை விடுத்து, அனோஜனை உயிரோடு மீட்டெடுக்க வேண்டுமெனவும் குடும்பம் கோரிக்கை விடுத்துள்ளது.
சவூதி அரேபியாவில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டு வரும் இலங்கை நாட்டவரான அனோஜன் சிவராசாவுக்கு, மேல்முறையீட்டுக்குப் பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள விடயத்தை இலங்கை வெளிவிவகார அமைச்சு உன்னிப்பாகக் கவனித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியாவில் பணிபுரிந்தபோது சிவராசா சமூக ஊடகத்தில் பதிவிட்டதாகக் கூறப்படும் கருத்து ஒன்றிலிருந்தே இவ்வழக்கு தொடரப்பட்டது.
குறிப்பிட்ட கருத்து இஸ்லாம் மதத்தையும் நபிகள் நாயகத்தையும் அவமதிப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
