நாடாளுமன்ற உறுப்பினருக்கான சிறப்புரிமையினை பயன்படுத்தி சேறுபூசுதல்களை முன்னெடுத்த சுயேட்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தெல்லிப்பழை வைத்தியசாலை புற்று நோய்ப்பிரிவு வைத்தியர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பினார்கள் எனும் குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் உள்ளிட்ட இரு வைத்தியர்களுக்கு எதிராக நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் யாழ்ப்பாண நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அவ்வழக்கில் கைதான அருச்சுனா இராமநாதன் உள்ளிட்ட இருவரையும் சொந்த பிணையில் செல்ல மன்று அனுமதித்துள்ளது.
வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் வியாழக்கிழமை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை அவதூறு பரப்பினார்கள் என குற்றம் சாட்டப்பட்டிருந்த அருச்சுனா இராமநாதன் மற்றும் ஜெயக்குமார் ஆகிய இரு வைத்தியர்களும் தமது சட்டத்தரணி ஊடாக மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.
வழக்கு விசாரணைகளை அடுத்து இரு வைத்தியர்களையும் சொந்த பிணையில் செல்வதற்கு மன்று அனுமதித்து , வழக்கினை எதிர்வரும் மே மாதம் 29ஆம் திகதிக்கு மன்று திகதியிட்டுள்ளது.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக இருவரும் மற்றொரு பெண் வைத்தியர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.