கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்த அதிசொகுசு பேருந்து ஒன்று, பொலன்னறுவை தமனபாய பக்கமுவ பகுதியில் வீதியைக் கடந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து இன்று (11) செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பேருந்து வீதியை விட்டு விலகி, வீதியோரத்தில் உள்ள வாய்க்காலின் நடுவே சிக்கிக்கொண்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
