மட்டக்களப்பு, எருவில் பொதுமக்களின் பேராதரவுடன் மண்ணின் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் பிரதிபலிக்கும் வகையில், YUK குழுமத்தின் 41வது சித்திரைக் குதூகல கலாசார விளையாட்டு, கலைத் திருவிழா இன்றைய தினம் 26.04.2026 மிகச் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வின் தொடக்கத்தில், வருகை தந்த அதிதிகள் அனைவரும் தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி கௌரவமாக வரவேற்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, மங்கல விளக்கேற்றல் மற்றும் இறை வணக்கத்துடன் விழா ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஆசியுரை, வரவேற்புரை மற்றும் தலைமையுரைகளைத் தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு நடத்தப்பட்ட இவ் விளையாட்டுப் போட்டிகளில், அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.
போட்டிகளின் நிறைவில், வெற்றி பெற்ற வீரர்களுக்கும் பெறுமதியான பரிசில்கள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் முதன்மை அதிதிகளாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இளையதம்பி சிறிநாத், ஞானமுத்து சிறிநேசன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மேலும், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைத் தவிசாளர், பிரதி தவிசாளர், உறுப்பினர்கள்,
அரச அதிகாரிகள், ஆலய நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், கழக உறுப்பினர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊர் பிரமுகர்கள் மற்றும் நலன் விரும்பிகள்.
உள்ளிட்ட பெருமளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.
அதிதிகளின் உரை மற்றும் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுபெற்றது.
41 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட YUK குழுமத்தின் இந்த விழா, எருவில் பிரதேச மக்களின் ஒற்றுமையையும் கலாசாரப் பிணைப்பையும் மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.