நாட்டில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற 93 சந்தேக நபர்களைத் திருப்பி அனுப்புமாறு சர்வதேச காவல்துறை மூலம் சிவப்பு அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், உதவி காவல் கண்காணிப்பாளர் எஃப்.யு. உட்லர் தெரிவித்தார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றபோது அவர் இவ்வாறு கூறினார்.
