STS தமிழ் TV 10-வது ஆண்டு நிறைவு விழா
STS தமிழ் TV தனது 10-வது ஆண்டு நிறைவு விழாவை 2026 மார்ச் 28 அன்று ஜெர்மனியின் டோர்ட்முண்ட் (Dortmund) நகரில் வெகுவிமரிசையாகக் கொண்டாடியது. புலம்பெயர் தமிழ் சமூகத்தின் கலை, கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாக்கும் நோக்கில், திரு. எஸ். தேவராசா அவர்களின் வழிகாட்டுதலில் இந்த ஊடகம் கடந்த பத்து ஆண்டுகளாக வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றது.
முக்கிய நிகழ்வுகள்
- இசை, நடனம் உள்ளிட்ட பல கலை நிகழ்ச்சிகள் மேடையில் அரங்கேறின.
- கலைஞர்கள், சமூக சேவையாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
- “ஒரு சமூகத்தின் அடையாளம் அதன் கலாச்சாரத்தில்தான் வாழ்கிறது” என்று திரு.எஸ். தேவராசா அவர்கள் தனது உரையில் நினைவூட்டினார்.
விருதுகள் பெற்றவர்கள்:
இந்த விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்குச் சிறப்பு விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது:
- ஆன்மீகச்சுடர்: ஸ்ரீ ஜெயந்திநாத சர்மா
- மணிக்குரல்நாயகன்: திரு முல்லை மோகன்
- சாதனைச்செம்மல்: திரு மாவை தங்கராஸா
- அன்னையர் தாரகை: திருமதி வதனி செல்வநாயகம்
- ஒலிச்சரம்: திரு தர்மலிங்கம் இரவீந்திரன்
- அறிவொளி விருது: திரு பண்ணாகம் கிருஷ்ணமூர்த்தி
- ஒலிக்கலைவித்தகன்: திரு சிவகுமாரன் சிவஞானம்
- கலைவித்தகி: திருமதி சிபோ சிவகுமாரன்
- சிம்மக்குரலோன்: திரு எமலியானஸ் புஸ்பராஜா (பட்டு)
- தாய்மண்நேசகன்: திரு இரா.ராஜன்
- கலைநாயகி: திருமதி சாந்தி துரைஅரங்கன்
- எழுச்சிக்கிரலோன்: திரு ஜெயன்
- இசைச்சிப்பி: மரியரொக் (தேவா)
- பாழ்மெண்டர் விருது: திரு கந்தசாமி (கண்ணன்)
