எகிப்து கடற்கரைக்கு அப்பால் இன்று (03) அதிகாலை 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும், அதன் மையம் சூயஸ் நகரிலிருந்து சுமார் 38 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்ததாக எகிப்து அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அதிகாரிகள் நிலைமையை கண்காணித்து வரும் நிலையில், உயிரிழப்பு அல்லது சொத்துச் சேதம் ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதேவேளை, நிலநடுக்கத்தின் தாக்கம் தொடர்பாக மேலதிக தகவல்களை அதிகாரிகள் தொடர்ந்து சேகரித்து வருகின்றனர்.
