இலங்கை பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும், சட்டத்தரணியுமான சாகர காரியவசம் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார்.
பொலிஸ்மா அதிபர் தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்துகள் குறித்து இடம்பெற்று வரும் விசாரணைக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் மத்திய குற்ற விசாரணை பணியகத்துக்கு இன்று வருகை தந்தார். இதன்போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Travel Guides & Travelogues
இந்த அழைப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சாகர காரியவசம்,
தான் தெரிவிக்காத விடயங்களைத் திரித்து தவறான அர்த்தங்களை வழங்கி, அரசாங்கம் தன்னை அரசியல் ரீதியாக பழிவாங்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.
தான் கூறிய கருத்துகளைத் திரிபுபடுத்தி காண்பிப்பதன் மூலம் எதிர்க்கட்சியினரை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தான் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், ஷானி அபேசேகரவை பிரதி பொலிஸ் மா அதிபர் பதவிக்கு நியமித்ததும் இந்த அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் வரலாற்றில் எந்தவொரு அரசாங்கமும் இவ்வாறு எதேச்சதிகாரமாக செயற்பட்டதில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
