சர்ச்சையை உண்டுபண்ணுகிறதா? சிந்தனையை
தூண்டுகிறதா ? என்ற பட்டிமன்ற தலைப்பிட்டு விவாதிக்கும் அளவுக்கு இறங்கி விட்டார்கள் என்றால். தலைப்பே பார்வையாளனுக்கான ஆர்வ
த்தை தூண்டுகிறது என்றால்
இந்த தூண்டலே படைப்புக்கு நல்ல சகுனமா@க அமைகிறது.
எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் தன் கதைகளுக்கு தலைப்பு இடுவதில் புதுமை செய்தார்.
உ+ம் யாருக்காக அழுதான், சினிமாவுக்கு போன சித்தாளு ,, ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்@,சில நேரங்களில் சில மனிதர்கள், புதுச் செருப்பு கடிக்கிறது, இப்படியாக….
அக்காலத்தில் திரைப்பட தலைப்புகள் இப்படி அமைந்திருந்தது
உ+ம் குங்குமம், பராசக்தி, குடியிருந்த கோயில்
வாழ்க்கைப் படகு, பாலும் பழமும், பணமா பாசமா,
இப்படி நீளும்
ஆனால் ஜெயகாந்தன் அவர்கள் இடும் புதுமையான தலைப்பு சில இயக்குனர்களுக்கு பிடித்து போக
குறிப்பாக அபூர்வ ராகங்கள், தப்புத் தாளங்கள், சொல்லத்தான் நினைக்கிறேன், இப்படியாக
பாலச்சந்தர் அவர்களும்,
பதினாறு வயதினிலே, கிழக்கே போகும் ரயில்,
நிறம் மாறாத பூக்கள், புதிய வார்ப்புகள், என்று பாரதிராஜா அவர்களும்
இன்னும் பலரும் அவர் ஸ்டைலில் தலைப்பிட்டார்கள்.
இது தொடர்பாக எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களிடம் ஒரு பத்திரிகை நிருபர் கேள்வி தொடுத்தார் அதாவது நீங்கள் கதைகளுக்கு தலைப்பிடுகிற பாணியிலே கொப்பி அடித்து இயக்குநர்கள் திரைப்படங்களுக்கு தலைப்பு இடுகிறார்கள் இது பற்றி உங்கள் கருத்து
என்ன? என்று கேட்ட போது ஜெயகாந்தன் அவர்கள் சொன்ன பதில் இல்லாதவர்கள் எடுத்து கொள்ளுகிறார்கள்.
ஆனால் இங்கே நஞ்சு தின்னி வீதி இயக்குநர் தேவதாஸ் சொல்கிறார் எனது திரைப்படத்திற்கான தலைப்பை நான் எங்கேயும் தேடிப் போகவில்லை
என் தாய் மண்ணே தந்து விட்டது. தான் பிறந்த ஊரின் வீதியே படப்பிடிப்பு தளத்தில் திரைப்பட தலைப்பாக அமைந்து விட்டது. அது இந்த திரைப்பட
குழுவுக்கு வெற்றிபுள்ளியாக அமைந்துவிட்டது.
13.09.26 பாரிஸில் அன்று திரைக்கு வருகின்ற வேலணை மைந்தன் தேவதாஸ் அவர்களின் கதை திரைக்கதை வசனம் இயக்கத்தில் “நஞ்சு தின்னி வீதி”. உருவாகியிருக்கிறது.
இத்திரைப்படத்தில் பலம் பொருந்திய பல ஆளுமைகள் கைகோர்த்திருக்கிறார்கள்
பிரெஞ்சு இலக்கியத்திலும் மொழியிலும் புலமை உள்ள , பிரஞ்சு புரட்சி நூலை தமிழில் எழுதியவரும் (அது
நான்கு பதிப்புகள் வெளிவந்துள்ளன)
மொழிபெயர்ப்பாளருமான வேலணை மைந்தன்
வாசுதேவன் அவர்கள்,
பிரெஞ்சு திரைப்படங்கள், குறும்படங்கள் தமிழ் பிரெஞ்சு இலக்கிய ஈடுபாடும் இரு மொழிப் புலமை யாளருமான அரவிந்த் அப்பாத்துரை அவர்கள்
டென்மார்க்கில் வாழும் எங்கள் நேசத்துகுரிய நாடகவியலாளர் கவிஞர் பல்திறனாளர்
ஆதவன் அவர்கள் என்று பல திறன் கொண்ட கூட்டணி
பலம் பொருந்திய கூட்டணி!
ஊகத்தின் அடிப்படையில்!!!!! டக் டிக்
புகலிடத்துக்கு வரும் போது இளசுகளாய் வந்த இவர்கள்
40 ஆண்டுகள் கழித்து பழசுகளாக இவர்கள் தாயகம் நோக்கி போகிறார்கள்
இவர்களின் கடந்த காலங்களில் பின் நோக்கி பார்ககப்படுவதின் சம்பவ கோர்வைகள் திரைக்கதையா?
அல்லது 40 ஆண்டுகள் கழித்து ஊருக்கு திரும்பும் இவர்கள் சந்திக்கும் சம்பவங்கள் திரைக்கதையா?
ஷெப்பா ! !!!!! பொறுத்திருப்போம் படம் பார்க்க!
எது எப்படியோ எந்த வித பரபரப்பும் இல்லாமல் படத்தை (படப்பிடிப்பு) முடித்து விட்டு
திரை ஓட்டத்திற்கு தயாரான நிலையில் படம் பாரிஸ் ரசிகர்களின் பார்வைக்கான ஆர்வத்தை
தூண்டியிருப்பதை அவதானிக்க முடிகிறது.
அதற்கு சான்றாக
ரிக்கற் விற்பனை முகவர் மங்கலம் அதிபர்
பரமேஸ்வரன் குறிப்பிடுகையில்
முதல் காட்சிக்கான ரிக்கெற்கள் கையிருப்பில் இல்லை இரண்டாவது காட்சிக்கான ரிக்கெற்கள் தான் விற்பனைக்குண்டு என்று விளம்பர படுத்தும் அளவிற்கு
ரிக்கெற் விற்பனை எகிறுகிறது !!!!
காரணம்” நஞ்சு தின்னி வீதி”. உள்ளே
என்ன புதிரை வைத்திருக்கிறது என்ற அவா
அனைவரையும் சூழ்ந்திருக்கிறது.
காத்திருங்கள் 13.09.26 நஞ்சு தின்னி வீதியில் நீங்களும் நானும் காலாற நடக்கலாம்…
K.P.L
கே.பி.லோகதாஸ்.
