ஏதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன்னர் தாம் கைது செய்யப்படலாம் எனக் கூறி, நாமல் ராஜபக்ச பிரச்சாரம் ஒன்றைத் தொடங்கியுள்ள நிலையில் அவர் கைதாவதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
தனது தந்தையான மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்திருந்த காலத்தில் அரங்கேற்றப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெட்டுவருகின்றது.அவுஸ்திரேலியாவின் ஒரு ஊடக வலையமைப்பு 2022 மே மாத தொடக்கத்தில் நாமல் ராஜபக்சவின் ஊழல்களை வெளிப்படுத்தியிருந்தது.
இதனிடையே மற்றொரு முன்னாள் அமைச்சரான ராஜித சேனநாயக்கவும் 2012ம் ஆண்டு முன்னெடுத்த ஊழல்கள் தொடர்பில் கைது அச்சத்தை எதிர்கொண்டுள்ளார்.
அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் கொழும்பு மாநகர மேயர் மொஹமட் முஸாமில் மகனான மொஹமட் நிசாம் ஜமால்தீன் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
லண்டன் செல்லும் நோக்கில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தபோது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நிதி மற்றும் மோசடி குற்ற விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்றுடன் தொடர்புடையதாக, அவருக்கு எதிராக பயணத் தடை விதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பயணத் தடை அமுலில் இருந்தபோதும் நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
