இந்தோனேசிய அதிகாரிகள் புதன்கிழமை அன்று, சுற்றுலாத் தீவான பாலிக்கு அருகே தீப்பிடித்து எரிந்த படகில் இருந்து 172 பேரை மீட்டனர்.
இந்தச் சம்பவத்தில் 19 வயதுப் பெண் உட்பட குறைந்தது ஒருவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாலியையும் லோம்போக்கையும் இணைக்கும் படாங் பாய்-லெம்பார் படகு வழித்தடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த வழித்தடத்தை, இவ்விரு பிரபலமான இடங்களுக்கு இடையே பயணம் செய்யும் சுற்றுலாப் பயணிகளும் பயன்படுத்துகின்றனர்.
இந்த மாதத்தில் இந்தோனேசியாவில் நடக்கும் இரண்டாவது பெரிய படகு தீ விபத்து இதுவாகும்.
