செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வளாகத்தில் மீட்கப்பட்ட எலும்புக் குவியல்கள் தொடர்பில் சட்டமருத்துவ அதிகாரியின் அறிக்கையின் பிரகாரமே அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Violent Crime
இன்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்ட அகழ்வில் புதிதாக 8 எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு எலும்புக்கூட்டுத்தொகுதி இரட்டைக் குழந்தைகளின் எலும்புக்கூடாக காணப்படுகிறது.
இதனிடையே நேற்றைய அகழ்வுப் பணிகளின் போது புதிதாக 5 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் வெளிப்பட்டதுடன், 6 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், ஏற்கனவே குவியலாக அடையாளம் காணப்பட்டு 42 என இலக்கமிடப்பட்ட மனித என்புக் குவியலும் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இதுவரை மொத்தமாக 552 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் வெளிப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண நீதிமன்றத்தில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுப் பிரித்தெடுக்கப்பட்ட பிற சான்றுப் பொருட்களை உத்தியோகபூர்வமாகப் படம் எடுக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இதற்கமைய, 1 முதல் 37 வரை இலக்கமிடப்பட்ட பிற சான்றுப் பொருட்கள் முழுமையாகப் படம் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.
