பிரிமா மற்றும் செரண்டிப் ஆகிய நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளன.
இதற்கமைய, கோதுமை மா கிலோ கிராம் ஒன்றின் விலையை 17 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை திருத்தம் இன்று (29) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, உயர்த்தப்பட்டுள்ள கோதுமை மாவின் விலை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் மத்திய செயற்குழு வரும் திங்கள்கிழமை கூடுவதெனத் தீர்மானித்துள்ளது.
