இலங்கையினை விட்டு வெளியேறியுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான சிராந்தி ராஜபக்ச, சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு , சில விசேட மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சுமார் ஒரு வார காலமாக உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த சிராந்தி , நேற்று (16) திடீரென சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.
இதனிடையே, அவர் விமான நிலையத்திற்கு வந்த பின்னர், நுழைவாயில் அருகே விமான நிலைய அதிகாரி ஒருவர் திடீரென அவரிடம் நிதி குற்றவியல் விசாரணைக்குழு முன்னிலையில் முன்னிலையாகுமாறு கோரும் கடிதத்தை கையளித்ததாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதனிடையே எதிர்வரும் 24ஆம் திகதி காவல்துறை நிதிக் குற்ற விசாரணைப் பிரிவின் முன்னிலையில் முன்னிலையாகுமாறு சிராந்தி ராஜபக்சவுக்கு காவல்துறை அறிவித்துள்ளது.
