அன்னை தந்த பாலில் உண்டு
எமக்கு நல் வீரம்
அன்னை மண்ணில் என்றும் வை நீ
அழியாத நேசம்
சிந்தையில் தெளிவு வேண்டும்
சீர்தூக்கி வாழ வேண்டும்
முந்தையர் காத்து வைத்த
முழு ஒழுக்கம் பேண வேண்டும்
முரசு ஒலிக்க அரசு அமைத்து
ஆண்டுவந்த பரம்பரை
முடங்கிக் கிடக்கப் போவதில்லை
முழங்கி நில் பறை தன்னை
அன்னியர் ஆதிக்கத்தில்
அடங்கிப் போகும் இனம் அல்ல
அடக்க அடக்க அடக்கிப் போக
சுரணை கெட்ட நாம் அல்ல
தாய் மண்ணை நேசித்த
தமிழர் இனப் பாசறை
தலைவர் தம்பி வழி நடக்க
துணிவு தந்த தலைமுறை
ஆக்கம் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா (01.05.2026)