மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் அறவழிப்போராட்டத்தின் 1000 நாள் நிறைவை முன்னிட்டு நடாத்தப்படும் நிகழ்வின் ஒரு அங்கமாக எழுநாவின் வெளியீடாகிய திரு. வை. ஜெயமுருகனின் “மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை : நில அடையாளம், இன அரசியல், வாழ்வாதாரம்” நூலின் அறிமுகம் இடம்பெறவுள்ளது.
சித்தாண்டி, கூடாரத்தில் 15.06.2026 ( திங்கட்கிழமை) காலை 10.00 மணிக்கு இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், நூலிற்கான அறிமுகவுரையினை திரு. சார்ள்ஸ் அன்ரனிதாஸ் அவர்கள் வழங்குவதுடன், நூல் ஆய்வுரையை திரு. க. குருநாதன் அவர்கள் வழங்கவுள்ளார்
