மிக் விமான கொள்வனவு தொடர்பான விசாரணைகளுக்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) வருகை தந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த கொள்வனவு தொடர்பான விடயங்கள் குறித்து அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்காகவே இந்த விசாரணை இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி ஒருவர் தொடர்பான இந்த விசாரணை இலங்கை அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மிக் விமான கொள்வனவு விவகாரம் தொடர்பான விசாரணைகள் அடுத்த கட்டமாக எவ்வாறு நகரும் என்பது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது..
செய்தியாளர் பிரதீபன்
